பேருந்து கட்டணம் உயர்வு! – கேரள அரசு ஒப்புதல்!

வியாழன், 14 மே 2020 (16:16 IST)
சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக குறைவான பயணிகளே பேருந்தில் அனுமதிக்கப்படுவதால் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கு கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஊரடங்கு மே 17 உடன் முடிவடைய உள்ள நிலையில் மாநில அரசுகள் மேற்கொண்டு செய்யவேண்டிய நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகின்றது. கேரளாவில் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக 38 பேர் பயணிக்க கூடிய பேருந்துகளில் 19 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று பேர் இருக்கையில் இருவரும், இரண்டு பேர் இருக்கையில் ஒருவரும் அமர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நின்று செல்ல அனுமதி இல்லை.

இதனால் கேரளா அரசு போக்குவரத்து கழகத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுவதால் அதனை ஈடுகட்டும் விதமாக டிக்கெட் கட்டணங்களை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா முழுவதுமாக கட்டுக்குள் வரும் வரை இந்த டிக்கெட் உயர்வு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்