கேரளாவில் வழக்கத்தை விட 3 மடங்கு மழை; வானிலை ஆய்வு மையம்

சனி, 18 ஆகஸ்ட் 2018 (19:49 IST)
கேரள மாநிலத்தில் வழக்கத்தை விட அதிகமாக 3 மடங்கு மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு அமையம் தெரிவித்துள்ளது.

 
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்த மழையால் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. நிலச்சரிவும் ஏற்பட்டு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுவரை 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ராணுவ வீரர்களும்,  தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டு வருகின்றனர்.
 
மீட்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிற மாநிலங்கள் சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய சார்பில் ரூ.600 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் கேரளாவில் வழக்கத்தை விட 3 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 11 மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்