கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், அந்த இரு மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அதேபோல், அதன் தாக்கம் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிளிலும் காணப்படுகிறது.
இதன் காரணமாக, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறை உள்ளிட்ட சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக நெல்லை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.