கேரளாவை அடுத்தடுத்து தாக்கும் வைரஸ்! – 2 சிறுவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு!

திங்கள், 6 ஜூன் 2022 (11:21 IST)
கேரளாவில் தொடர்ந்து சில வைரஸ் பாதிப்புகள் அச்சுறுத்தி வரும் நிலையில் மேலும் புஹிதாக நோரா என்ற வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த சில காலமாக வெவ்வேறு வகையான புதிய வைரஸ் தொற்றுகள் பரவி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸிகா வைரஸ், தக்காளி வைரஸை தொடர்ந்து சமீபத்தில் வெஸ்ட் நெல் என்ற புதிய வைரஸ் பரவியது.

வெஸ்ட் நெல் வைரஸ் பாதிப்பால் கடந்த மே 30ம் தேதி 47 வயதான நபர் மரணம் அடைந்தார். இந்நிலையில் இப்போது நோரா என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸால் இரண்டு சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வெவ்வேறு வகையான வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்