கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பெஹல்காம் தாக்குதலில் பலியான கேரளாவை சேர்ந்தவரின் வீட்டிற்கு முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் பெஹல்காம் அருகே சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் இந்த தாக்குதலில் கேரளாவை சேர்ந்த ராமச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகள் மற்றும் பேரக்குழந்தைகள் முன்னிலையில் சொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ராமச்சந்திரன் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதை உடன் நடந்த நிலையில், ராமச்சந்திரன் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில், ஊடகங்களை சந்திக்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.