குடிநீர் குடித்து உயிரிழப்பு - விஜயநகரில் பீதி!

வியாழன், 7 அக்டோபர் 2021 (09:55 IST)
விஜயநகர் மாவட்டத்தில் குடிநீரில் கழிவுநீரும் கலந்துவிட்டதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 
 
விஜயநகர் மாவட்டத்தில் உள்ள மகராபி கிராமத்தின் குடிநீர் பிரச்னை இருந்தவந்ததால் இதனை சரி செய்யும் பொருட்டு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. இதில் குடிநீரோடு கழிவுநீரும் கலந்து தண்ணீர் விஷமாகியுள்ளது. 
 
இந்நீரை குடித்த கிராம மக்கள் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்