ஹிஜாப் அணிய தடை உத்தரவு; கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!

வியாழன், 17 மார்ச் 2022 (08:30 IST)
கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பி.யூ அரசு கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் கர்நாடகா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்