ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம்!

செவ்வாய், 15 மார்ச் 2022 (14:47 IST)
பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் உள்பட மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிய தடை என இன்று கர்நாடக ஐகோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்தது
 
மேலும் மத அடையாளங்களுக்கான உடைகளை அணிய தடை விதிக்கும் கர்நாடக அரசின் அரசாணை செல்லும் என்றும் தெரிவித்து அதற்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது 
 
இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சென்னையில் மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்