கேரள பயணத்தை தவிர்க்கவும் - கர்நாடக அரசு

புதன், 8 செப்டம்பர் 2021 (10:20 IST)
கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு கர்நாடக அரசு வேண்டுகோள். 
 
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கேரள அரசு சுகாதாரத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனிடையே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்