கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. முதல்வர் எடியூரப்பா தலைமையிலான இந்த ஆட்சியில் பலர் அமைச்சர் பதவி கேட்டு தொந்தரவு செய்வதால் இந்த ஆட்சியும் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதனை அடுத்து ஒரு வழியாக சமீபத்தில் 17 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இருப்பினும் இன்னும் சிலர் தங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்ற போர்க்கொடி தூக்கி வந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் பதவி கேட்டு அடம் பிடித்த மூவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பா நேற்று 3 துணை முதல்வர்கள் நியமனம் செய்துள்ளார். கோவிந்த கார்ஜோல், அஸ்வத் நாராயணன், லட்சுமண் சவதி ஆகிய மூவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பாவின் இந்த நடவடிக்கை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
மேலும் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட 17 பேருக்கும் அவரவர்களுக்கான துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு அதிருப்தியாளர்களை சமாளிக்க துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவிகளை எடியூரப்பா கொடுத்து சமாதானம் செய்திருந்தாலும், வரும் காலத்தில் இன்னும் சிலர் அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கும் போது, ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்