தமிழ் பாடல்களை கேட்டு ஸ்பீக்கர்களை உடைத்த கன்னட அமைப்பினர் !

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (15:07 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற இசைக் கச்சேரியில், தமிழ் சினிமா பாடல் ஒலிபரப்பப் பட்டது. இதைக் கேட்ட கன்னட அமைப்பினர் ஒலிப்பெருக்கிகளை உடைத்ததுடன் , தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பலரும் எதிர்பு தெரிவித்துவருகின்றனர்.
காவிரி நதி மட்டுமல்ல, தமிழர்களுக்கெதிராக கன்னட அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். தமிழர்களின் வாகனத்தை அடித்து நொறுக்குவது. உரிமைகளைப் பறிப்பது போன்ற பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில்  கர்நாடகாவில் தமிழர்கள் வசிக்கும் இடங்களில், தமிழ் சினிமாப் பாடல்களை ஒலிக்கவிட்டால், இதை தடை செய்வது போன்ற அசம்பாவிதங்களும் நடைபெற்று வருகின்றன.  பெங்களூரில் ஜேஜே நகரில் உள்ள மார்கண்டேய நகரில் கங்கம்மாதேசி உற்சவம் நடத்தப்பட்டது. இவ்விழாவை தமிழ் அமைப்பினர் நடத்தியதாகத் தெரிகிறது. 
 
கடந்த 17 ஆம் தேதி இந்நிகழ்வின் போது  இரவு இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நடத்த காவல்துறையிடம் முறையாக அனுமதி பெறப்பட்டது.அப்போது தமிழ்திரைப்பட பாடல்கள் அதிகம் ஒலிபரப்பட்டது. இதைக் கேட்ட கர்நாடக ரஷன வேதிகே என்ற கன்னட அமைப்பினர் ஒரு கும்பலாக நிகழ்ச்சியில் நுழைந்து சிலரை தாக்கியதுடன்,ஸ்பீக்கர்களையும் உடைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜேஜேநகர் போலீஸார் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.ஆனால் ஒருவரையும் போலீஸார் கைது செய்யவில்லை என்று தெரிகிறது. இதற்கு தமிழக அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்