பெரும்பான்மையை நிரூபிப்பது எப்போது? எடியூரப்பா தகவல்

வெள்ளி, 26 ஜூலை 2019 (20:50 IST)
கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு தனது ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக இன்று கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட எடியூரப்பா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 
 
கர்நாடக மாநிலத்தில் முதல்வராக இருந்த குமாரசாமியின் ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து பாஜக ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். அதனை அடுத்து இன்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் எடியூரப்பா. அவரது அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் பொறுப்பை ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் எடியூரப்பா தனது அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாரம் கவர்னர் கெடு கொடுத்துள்ள நிலையில் வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் அன்றைய தினமே நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும் விவசாய கடன்கள் குறித்த முழுமையான தகவலை தெரிந்து கொண்டு அதை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
எக்காரணத்தை கொண்டும் தரந்தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று கூறிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா , இன்னும் ஐந்து மாதங்களில் எனது தலைமையிலான அரசு மற்றும் முந்தைய அரசின் சாதனைகள் என்ன என்பது குறித்து காட்ட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்
 
எடியூரப்பா தனது பெரும்பான்மையை எவ்வாறு இருக்கப் போகிறார் என்பதை அறிய அரசியல் விமர்சகர்கள் பெறும் ஆர்வத்தில் உள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்