எடியூரப்பாவிற்கு ஒரு வாரம் கெடு விதித்த ஆளுனர்: கர்நாடகாவில் பரபரப்பு

வெள்ளி, 26 ஜூலை 2019 (18:41 IST)
கர்நாடக மாநில முதலமைச்சராக எடியூரப்பா சற்று முன் பதவி ஏற்றுக் கொண்டார் அவர் தனது பெரும்பான்மையை இன்னும் ஒரு வாரத்தில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அவருக்கு கெடு விதித்துள்ளார் 
 
கர்நாடகாவில் முதலமைச்சராக இருந்த குமாரசாமியின் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இந்த நிலையில் புதிய அரசு அமைக்க பாஜகவிற்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்ற எடியூரப்பா சற்றுமுன் கர்நாடக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். கவர்னர் மாளிகையில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுக் கொண்டனர். முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தெரிகிறது. 
 
கர்நாடக எம்.எல்.ஏக்கள் 16 பேர்  செய்த ராஜினாமாவை இன்னும் சபாநாயகர் ஏற்காத நிலையில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிப்பாரா? என்பதை ஒரு வாரம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
கர்நாடகாவில் மொத்தம் 224 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு 113 எம்.எல்.ஏக்கள் தேவை. ஆனால் பாஜகவிடம் 105 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்