என்னை விடுதலை செய்யுங்கள்: புதிய ஜனாதிபதிக்கு முதல் மனுவை அனுப்பிய கர்ணன்

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (05:16 IST)
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக நேற்று மதியம் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவியேற்று கொண்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 



 
 
நேற்று ஜனாதிபதியாக பதவியேற்ற ராம்நாத் கோவிந்துக்கு முதல் மனுவை அனுப்பியவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் தான். தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரும் மனுவினை அவர் புதிய ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். 
 
கடந்த 3ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம்,  நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. எனவே உயர்நீதிமன்ற பெஞ்சுக்கு மனுவினை மேல் முறையிடு செய்திருந்தார். மேலும் மேற்கு வங்க ஆளுநருக்கும் தனக்கு பரோல் வழங்குமாறு கோரி மனு செய்திருந்தார்.
 
இந்நிலையில் தனக்கு பெயில் அல்லது விடுதலை அளிக்குமாறு இந்திய ஜனாதிபதிக்கு அவரின் சார்பில், அவரது வழக்கறிஞர் குழு மின்னஞ்சல் மற்றும் பேக்ஸ் மூலம் மனு செய்துள்ளது. இந்தியாவின் ஜனாதிபதியாக திரு.ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றபின் அவருக்கு வந்த முதல் மனு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்