இந்த சம்பவம் கடந்த வாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இன்று ஜோதிராதித்யா சிந்தியா மோடியை சந்தித்து பேசினார். இதன் பின்னர் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி கடிதம் ஒன்றை சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிய ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸில் முக்கிய நபராக இருந்தேன்; தற்போது அதிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது என குறிப்பிடுள்ளார்.