இதில், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மேலும், ராகுல் காந்தி கடந்த ஆண்டு அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின், முகில் வாஸ்னிக் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது, அவர் அரசியல் செல்வாக்கு உள்ள நபர் என்பது குறிப்பிடத்தக்கது.