நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் ரவுடி சுட்டுக் கொலை.. பரபரப்பு தகவல்..!

Siva

புதன், 12 மார்ச் 2025 (09:37 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் பிரபல ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு செல்லும் போது சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அம்மன் சாவு. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தன. இதன் காரணமாக நேற்று அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு தொடர்ந்து வழக்கு ஒன்றில் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அம்மன் சாவுவை அழைத்து சென்றது.

அப்போது, வாகனத்தில் ஏற முயன்றபோது திடீரென அவர் தப்பிக்க முயன்றார். இதனை அடுத்து அம்மன் சாவின் கூட்டாளிகள் போலீஸ் வாகனத்தின் மீது வெடிகுண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பதிலளித்த போலீசார் திருப்பி சுட்டதில், அம்மன் சாவுக்கு துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஆனால், அவரது கூட்டாளிகள் தப்பி ஓடியதாக தகவல் தெரிவிக்கிறது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்