ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை: காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா?

திங்கள், 23 டிசம்பர் 2019 (06:00 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று அம்மாநிலத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.  ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 30, டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது
 
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறப்படும் நிலையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது சரியானதா? என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்
 
காங்கிரஸ் கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. பாரதிய ஜனதா கட்சி 79 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது இதுபோக ஆல் ஜார்கண்ட் ஸ்டுடண்ட் யூனியன் என்ற கட்சி 52 தொகுதிகளில் போட்டியிட்டது
 
இன்னும் சில மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து ஜார்கண்ட் மாநிலத்தின் தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்