ஆந்திராவுக்கு நான்கு தலைநகரங்கள் ? – ஜெகன் மோகனின் புதிய திட்டம் !

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (08:37 IST)
ஆந்திர மாநிலத்திற்குப் புதிதாக நான்கு தலைநகரங்களை அறிவிக்கும் திட்டத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆந்திராவின் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி சாதிவாரியாக ஐந்து துணை முதலமைச்சர்களை நியமித்தார். அது இந்தியா முழுவதும் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. இதையடுத்துத் தலைநகர் விஷயத்திலும் அவர் இதேப் போல ஒருத் திட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ஹைதராபாத் தெலங்கானாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. அதனால் ஆந்திராவின் தலைநகராக அமராவதி நிர்ணயிக்கப்படும் என அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். 33,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அமராவதி நகர் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் அந்த திட்டத்தைக் கைவிட்டுவிட்டு புதிதாக நான்கு தலைநகர்களை அமைக்க தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை ஆந்திர மாநில பாஜக எம்.பி டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்