ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்துக்கு சொந்தமான டிவி சேனல்கள் நீக்கம்: கேபிள் ஆப்பரேட்டர்கள் அதிரடி..!

Siva

திங்கள், 24 ஜூன் 2024 (07:50 IST)
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி படுதோல்வி அடைந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் ஆந்திராவில் ஆட்சி மாறியதும் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்திற்கு சொந்தமான டிவி சேனல்களை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது .

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான நான்கு சேனல்கள் ஒளிபரப்பாகவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆறாம் தேதியே சில சேனல்கள் நிறுத்தப்பட்டதாகவும் கடந்த வெள்ளி முதல் மேலும் சில சேனல்கள் நிறுத்தப்பட்டதாகவும் இந்த சேனல்கள் அனைத்தும் ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்திற்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அரசு தரப்பில் இருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று ஆங்கில அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இது குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கூறிய போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள அரசு, கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத்திற்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்துள்ளது என்றும் ஆந்திரா அரசின் வழிகாட்டின் பேரில் தான் சில சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் காட்டியுள்ளது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்