இந்திய தேர்தல்கள் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும்: ஜெகன்மோகன் வலியுறுத்தல்!

Mahendran

செவ்வாய், 18 ஜூன் 2024 (13:14 IST)
இந்திய தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தி உள்ளார். 
 
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இதற்கு காங்கிரஸ், திமுக உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 
 
சமீபத்தில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் மின்னணு வாக்கு பதிவின் மூலம் முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்ததை அடுத்து ராகுல் காந்தி உள்பட பலர் அதற்கு ஆதரவு தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இந்திய தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். முன்னேறிய ஜனநாயக நாடுகள் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை என்றும் வாக்கு சீட்டை முறையை பின்பற்றுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஜனநாயகத்தின் உண்மையான உணர்வுகளை நிலைநாட்ட நாமும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்