ஜெகன் மோகன் ரெட்டியின் வீடு இடிப்பு.. சந்திரபாபு நாயுடுவின் பழிவாங்கும் படலமா?

Mahendran

சனி, 15 ஜூன் 2024 (15:58 IST)
ஜெகன் மோகனின் வீட்டின் முன்புறம் இடிக்கப்பட்டுள்ளதை அடுத்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பழிவாங்கும் படலம் தொடங்கிவிட்டதாக என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், வீட்டின் முன்புறம் இடிக்கப்பட்டதாகவும், நடைபாதையை மறித்து பாதுகாவலர்கள் தங்குவதற்காக அறை கட்டப்பட்டிருந்ததாக புகார் எழுந்த  நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஹைதராபாத் நகரில், லோட்டஸ் சர்க்கிள் பகுதியில் உள்ள வீட்டின் ஜெகன் மோகனின் வீட்டின் முன்புறம் இருந்த அறை சற்றுமுன் இடிக்கப்பட்டது. இதனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஹைதராபாத் மாநகராட்சிக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதில் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை என்றும் தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்