ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் இன்று துவக்கி வைக்கும் சேவைகள்!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (09:44 IST)
சென்னை நகரில், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை; சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரை என, இரண்டு வழித்தடங்களில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.


 


முதற்கட்டமாக, பணிகள் முடிந்து, கோயம்பேடு முதல் ஆலந்துார் வரை, 2015 ஜூலை முதல், மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சின்னமலை - மீனம்பாக்கம் இடையிலான 8 கி.மீ., துாரத்திற்கு, உயர்மட்ட வழித்தட பணிகள் முடிந்து சோதனை ஓட்டங்களும் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. அந்த சேவையை, காணொலிக் காட்சி மூலம், தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, முதல்வர் ஜெயலலிதா, இன்று துவக்கி வைக்கிறார்.

அதனோடு விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலையில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் அவர் திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்