இந்த நிலையில் தற்போது ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் இருக்கும் கண்டுபிடிக்கப்பட்டதுடன் விக்ரம் லேண்டருக்கு என்ன ஆகியிருக்கும் என்பதையும் அந்த புகைப்படத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி விக்ரம் லேண்டர் நிலவில் மோதி இருக்க வாய்ப்பு இல்லை என்றும், ஏனெனில் ஒரு பாராசூட் கட்டிய விமானி போல நிலவில் மிக மிக மெதுவாக அமைதியாக லேண்டர் இறங்கும் வாய்ப்பே உள்ளதாகவும், அதாவது விக்ரம் லேண்டர் எந்த விதமான சேதாரமும் இன்றி இருக்கவே வாய்ப்பு என்று இஸ்ரோ தெரிவிக்கிறது.
மேலும் விக்ரம் லேண்டர் சந்திரனில் செங்குத்தான நிலையில் விழுந்திருந்தால் ஆய்வுகளை தொடர வாய்ப்புள்ளதாகவும், ஆனால் அதேசமயம் விக்ரம் லேண்டர் கிடைமட்டமாக விழுந்திருந்தால் விக்ரம் லேண்டரை சேதமாகியிருக்க இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதன்பின் ஆய்வுகளை தொடர வாய்ப்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.
இனி அடுத்தகட்ட நடவடிக்கை என்னவெனில் பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையத்தில் இருந்து விக்ரம் லேண்டருக்கு கட்டளைகள் அனுப்பப்படும் என்றும் அந்த கட்டளைகளுக்கு லேண்டர் பதில் கிடைத்தால் சக்ஸஸ் என்றும் ஒருவேளை பதில் வரவில்லை என்றால் லேண்டரில் இருக்கும் அவசர கால மாற்று கருவிகளுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்யப்படும் என்றும், ஒருவேளை அதுவும் வேலை செய்யவில்லை என்றால் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டருக்கு கட்டளைகள் அனுப்பப்பட்டு, அதன்மூலம் லேண்டருக்கு கட்டளை அனுப்பபட்டு விக்ரம் லேண்டர் பதில் வருகிறதா? என்று சோதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இவையனைத்தும் பயனளிக்கவில்லை என்றால் அதற்கு பின் இருக்கும் ஒரே ஒரு வழி என்னவெனில் லேண்டருக்குள் இருக்கும் பிரக்யான் ரோவரை நேரடியாக தொடர்பு கொண்டு ஆய்வுகளை தொடர முயற்சிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மொத்தத்தில் இந்த ஆய்வை 100% வெற்றிகரமானதாக்க இந்திய விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது