ஆனால் நிலவின் தரைதளத்தைத் தொடும்போதே இஸ்ரோ தரை நிலையம் விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை இழந்தது. இந்நிலையில் லேண்டர் என்ன ஆனது என்ற விவரம் வெளியாகவில்லை. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் கே சிவன் ‘லேண்டர் விக்ரம் 2.1 கி.மீ உயரத்தை அடையும் வரை இயல்பாகவே சமிக்சைகளை அனுப்பி வந்தது. அதைத் தொடர்ந்து, லேண்டரிலிருந்து தகவல் தொடர்பு இழந்தது. இந்நிலையில் தொடர்பு இழந்ததற்கான காரணம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.