ரயில்களை கண்காணிக்க இஸ்ரோ உதவியுடன் புதிய தொழில்நுட்பம்!

சனி, 24 செப்டம்பர் 2022 (10:49 IST)
ரயில்களை கண்காணிக்க இஸ்ரோ உதவியுடன் புதிய தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
இதுகுறித்து இந்திய ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரயில் நிலையங்களில் ரயில்களின் வருகை, ரயில்களின் புறப்படும் நேரம் மற்றும் வழித்தடம் ஆகியவற்றை கண்காணிப்பதற்காக புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது
 
மேலும் ரயில்கள் இயக்கப்படும் நேரத்தை தானாகவே பெறுவதற்கு ரயில் இன்ஜின்களில் நிகழ்நேர தரவு சாதனம் பொருத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
 
இந்த சாதனம் பொருத்தப்பட்ட ரயில்களில் புறப்படும் நேரம், வேகம், இருப்பிடம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும் என்றும் இதனால் பயணிகள் மிக எளிதில் ரயில்களை முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தற்போது 2700 எண்களில் நிகழ்நேர தகவல் சாதனம் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்