இதையடுத்து நிலவில் இறங்கி ஆராய்ச்சிகள் செய்யும் சந்திராயன் 2 ராக்கெட் தயாரிப்புப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. ஆனால் சந்திராயன் 2 எப்போது விண்ணில் ஏவப்படும் என்பதில் நீண்ட இழுபறி இருந்தது. இதுகுறித்து இஸ்ரோ இப்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘சந்திரயான் - 2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகிய மூன்று தொகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்று தொகுதிகளுக்கான பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுவிட்டன. ஜூலை 9 முதல் 16 வரையிலான காலத்தில் சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்பட்டு செப்டம்பர் 6ஆம் தேதி நிலவைச் சென்றடையும்’ என் அறிவித்துள்ளது.