நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக கட்சிக்காக நாங்கள் உதவி செய்தோம் என்று கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா நிறுவனத்தின் இந்திய கிளையான ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ் கூறியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா முறைகேடு விவகாரம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்குகள் மூலம் தகவல்கள் திருடி சோதனை செய்து இருக்கிறது. பயனாளர்களின் அனுமதியின்றி ஃபேஸ்புக் நிறுவனம் அதற்கு அனுமதி வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரச்சனை இந்தியாவிலும் வெடித்துள்ளது.
இந்த முறைகேட்டில் பாஜக முக்கிய பங்கு வகிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா நிறுவனத்தின் இந்திய கிளையான ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ் என்ற நிறுவனத்துடன் பாஜகதான் தொடர்பில் உள்ளது.
2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற உதவியதற்காக அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகம் சென்றார் நரேந்திர மோடி. இந்த சந்திப்பில் நிறைய பணம் கைமாறி இருக்கலாம்.
ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ் நிறுவனத்தின் லிங்க்டின் பக்கத்தில், நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக கட்சி நாங்கள் உதவி செய்ததன் மூலமே வெற்றி பெற்றது என்று அந்நிறுவனம் வெளிப்படையாக கூறியுள்ளது.
ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ் நிறுவனம் மூலம் பாஜக இந்தியா முழுவதும் பொய்யான செய்திகள் மற்றும் புள்ளி விவரங்களை பரப்பி மக்கள் மனநிலையை மாற்றி உள்ளது என்று குற்றச்சாட்டியுள்ளனர்.
மேலும் இந்த ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ் நிறுவனத்துடன் ராஜ்நாத் சிங் நெருக்கமாக உள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.