பெயர் மாறுகிறது ‘இந்திய தண்டனை சட்டம்’: புதிய பெயர் என்ன?

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:16 IST)
இந்திய தண்டனைச் சட்டம் உள்பட ஒரு சில பெயர்கள் மாற்ற இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
IPC என்று கூறப்படும் இந்திய தண்டனை தண்டனைச் சட்டம், IEA என்ற இந்திய சாட்சிகள் சட்டம் மற்றும் குற்றம் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படுவதாக  மக்களவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
புதிய சட்டங்கள் கொண்டு வருவதற்கான  மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்‌ஷ்யா, பாரதிய சுரக்ஷா சன்ஹிதா, என புதிய  சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
 
இந்திய தண்டனைச் சட்டம் என்ற பெயர் மாற்றப்படுவதற்கு எதிர்க்கட்சிகள்  எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்