பாஜகவுக்குத்தான் நஷ்டம் அண்ணாமலைக்கு லாபம் - நடிகர் எஸ்.வி.சேகர்

வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (19:35 IST)
அண்ணாமலை பாஜக தலைவராக உள்ளதால் பாஜகவுக்குத்தான் நஷ்டமே தவிர அண்ணாமலைக்கு லாபம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.
 
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நிலைய்ல், கடந்த சட்டசபைத் தேர்தல் முதற்கொண்டு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி வகித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை ரமேஸ்வரம் மாவட்டத்தில் தன் பாஜக தொண்டர்களுடன் தொடங்கினார். 

அண்ணாமலையின் பதவி பற்றி நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக பாஜகவை பொருத்தவரை குறைந்தது 10 ஆண்டுகளாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தால் தான் அவர்களுக்கு பாஜகவின் ஐடியாலஜி எல்லாம் தெரியும்.

இது எதுவுமே தெரியாமல் யாரையோ ஒருத்தரை சந்தோசப்படுத்த …அந்த ஆள் இவரை சந்தோசப்படுத்த இந்தப் பதவியை அவருக்குக் கொடுத்துள்ளார்கள்…இதனால் பாஜகவுக்குத்தான் நஷ்டமே தவிர அண்ணாமலைக்கு லாபம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. ஆட்சிக்கு பிஜேபி வரும் டெல்லியில் தமிழ் நாட்டின் உதவியே இருக்காது. அண்ணாமலையினால் ஒரு சீட் கூட கிடைக்காது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்