மத்திய பட்ஜெட் 2021-2022; தொழில்துறை நிபுணர்கள் கருத்து என்ன?

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (15:37 IST)
மத்திய அரசின் 2021-2022 ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் குறித்து தொழில்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மருத்துவம், பொருளாதார, தொழில் முதலீடு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில்துறையினர் பட்ஜெட் குறித்த தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேசன் தலைவர் வின்கேஷ் குலாதி கூறுகையில் ”மத்திய அரசின் பழைய வாகனங்களை மாற்றிக் கொள்ள வழங்கப்பட்டுள்ள சலுகை வரவேற்கதக்கது. 1990ம் ஆண்டு காலத்திலிருந்து செயல்பட்டு வரும் வாகனங்களில் தற்போது சுமார் 5% முதல் 10% வரை புழக்கத்தில் இருந்து வருகின்றன. இவற்றை மாற்றி புதிய வாகனங்கள் வாங்க அரசு உதவுவது ஆரோக்கியமான ஒன்றாகும்”என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாரத் மாலா திட்டம் மூலம் 19,500 கிலோ மீட்டருக்கு புதிய வழிசாலைகள் அமைக்கப்படுவது போக்குவரத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இரும்பு பொருட்களுக்கான 7.5 சதவீத வரிச்சலுகை விற்பனையாளர்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் சாரம்சங்களை மேலும் பல தொழில் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்