ஒரே ஒரு ஊழியருக்கு கொரோனா பாதிப்பு: இன்போசிஸ் எடுத்த அதிரடி முடிவு

ஞாயிறு, 15 மார்ச் 2020 (11:40 IST)
இன்போசிஸ் எடுத்த அதிரடி முடிவு
கடந்த சில நாட்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது என்பதும் இந்த வைரஸ் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்த விட்டதும் 100 பேர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு ஊழியர்களை வீட்டிலேயே பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டு வருகின்றனர். ஒரு சில அலுவலகங்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெங்களூரில் இயங்கிவரும் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த இன்போசிஸ் நிறுவனம், அந்த கட்டடத்தையே காலி செய்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
புதிய அலுவலகம் தேடும் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி புரியும்படி ஊழியர்களுக்கு இன்போசிஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரே ஒரு ஊழியர் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்ததால் கட்டடத்தையும் காலி செய்த இன்ஃபோசிஸ் நிர்வாகத்தின் நடவடிக்கையை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்