ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு: இறக்குமதியாளர்கள் கவலை!

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (17:11 IST)
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதையடுத்து ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் இறக்குமதியாளர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். 
 
கடந்த சில மாதங்களாக ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்து கொண்டே வருகிறது என்று ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80.07 என வர்த்தகமாகி உள்ள நிலையில் இறக்குமதியாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர் 
உலகின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்வதால் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பில் பணம் கொடுக்க வேண்டியதுதான் இறக்குமதியாளர்கள் பெரும் கவலை அடைகின்றனர் 
 
ஆனால் அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக அதிக லாபம் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் தான் பணவீக்க சதவிகிதம் சரிவு  அடைந்து வருகிறது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்