இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரிப்பு!

வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:35 IST)
இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் தெரிவித்துள்ளது.
 
கடந்த 2014ஆம் ஆண்டு செல்போன் உற்பத்தியில் மதிப்பு 18 ஆயிரத்து 900 கோடி என்று இருந்த நிலையில் தற்போது 2.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்பட பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களின் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்