வட மாநிலத்தை சேர்ந்த சஷ்வாத் என்ற நபர் தனது தாயை கடந்த 28ஆம் தேதி அஜ்மீர் ரயிலில் ஏற்றி விட்டார். ஆனால் அந்த ரயில் குறிப்பிட்ட நேரத்தில் அவரது தாயார் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவில்லை. இதனால் பதட்டம் அடைந்த சஷ்வாத் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தாயார் பயணம் செய்து கொண்ட ரயில் என்ன ஆயிற்று? தனது தாயார் எந்த நிலையில் இருக்கிறார்? என்பது குறித்த தகவலை தெரிந்து கொள்ள விரும்புவதாக ஒரு டுவீட்டை பதிவு செய்து அந்த டுவிட்டை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இந்திய ரயில்வே துறைக்கு டேக் செய்தார்
சஷ்வாத் டுவீட்டை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகம், அவரது தாயார் குறித்த விபரங்களை சேகரித்து பின்னர் அவரது தாயார் பயணம் செய்து கொண்டிருந்த ரயில் பெட்டிக்கு சென்றனர். அங்கிருந்து உடனடியாக மொபைல் போன் மூலம் அவரது தாயாரை மகனுடன் பேச வைத்தனர்
இதன் மூலம் தனது தாயார் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்து கொண்டதை தெரிந்துகொண்டு சஷ்வாத் மகிழ்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திற்கும் ரயில்வே அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து மேலும் ஒரு டுவீட்டை பதிவு செய்தார். இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி ரயில்வே துறையின் நன்மதிப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது