இந்தியா தயாரித்த ஏவுகணை பரிசோதனையில் வெற்றி....

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (18:08 IST)
மற்ற நாடுகளின் உதவியில்லாமல் இந்தியாவில் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை  சோதனையில் குறிப்பிட்ட இலக்கை தாக்கி புதிய சாதனையை படைத்துள்ளது.


 

 
இந்தியா சார்பில், 25 முதல் 30 கி.மீ வரை சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணைகளை, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்று மேம்பாட்டு நிறுவனம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 
 
அப்படி தயாரிக்கப்பட்ட ஒரு ஏவுகணையை பரிசோதிக்கும் விதமாக, ஒடிசாவின் பாலாசோர் அருகே உள்ள சந்திப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஏவுதளத்தில் இருந்து அந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
 
இதையடுத்து, இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தது. அனைத்து காலநிலையிலும் செயல்படும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகனை, ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளை தாக்கும் திறன் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்