அஸ்வினுக்கு பதிலா ஷர்துல் தாகுர்.. அணியில் நடந்த திடீர் மாற்றம்! – டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் வியூகம்!

புதன், 11 அக்டோபர் 2023 (13:55 IST)
இன்று நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் – இந்தியா இடையேயான உலக கோப்பை போட்டிக்கான அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.



இந்தியாவில் நடந்து வரும் ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் ஒன்பதாவது போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த அணிகளில் விளையாட உள்ள ப்ளேயிங் 11 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய வீரர்கள்: ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், ஜாஸ்ப்ரிட் பும்ரா, முகமது சிராஜ்

ஆப்கன் வீரர்கள்: ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சட்ரான், ரமத் ஷா, ஹஸ்மதுல்லா ஷாகிதி, முகமது நபி, நஜிபுல்லா சட்ரான், அஹமதுல்லா ஒமர்சாய், ரஷித் கான், முஜிப் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபரூகி.

முந்தைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பந்து வீச்சில் அஸ்வின் இருந்த நிலையில் இந்த போட்டியில் அவருக்கு பதிலாக ஷர்துல் தாகுர் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்