இந்தியாவில் முதியோர்கள் சதவீதம் அதிகரிக்கும்: 2050ல் எவ்வளவு இருப்பார்கள்?

வியாழன், 28 செப்டம்பர் 2023 (15:41 IST)
இந்தியாவில் 2050ஆம் ஆண்டுக்குள் முதியோர்களின் சதவீதம் அதிகரிக்கும் என அறிக்கை வெளியாகி உள்ளது. 
 
UNFPA என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 20% முதியவர்கள் 2050 ஆம் ஆண்டுக்குள் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது 
 
UNFPA நிறுவனம் இந்தியா முழுவதும் ஆய்வு செய்தது.  அதன்படி 2050 போல் இந்தியாவில் முதியோர் சதவீதம் 20% அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது. 
 
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்திய அரசின் மக்கள் தொகை கணிப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகார துறையின் உலக மக்கள் தொகை வாய்ப்புகள் ஆகியவற்றின் சமீபத்திய டேட்டாக்களில் இருந்து பயன்படுத்தப்பட்டு இந்த அறிக்கை வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இந்திய மக்கள் தொகை 142 கோடிக்கும் அதிகம் என்பதும் உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்