பிரிட்டன் வகையை விட இந்திய வகையே ஆபத்தானது: கொரோனா ஆய்வு முடிவு!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (07:46 IST)
பிரிட்டன் வகை கொரோனா இந்திய கொரோனா வைரஸை காட்டிலும் அதிகமாக பரவும் தன்மை கொண்டதல்ல என ஆய்வு முடிவுகள் தகவல். 

 
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பீகார், டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த முறை கொரோனா பரவலின் தீவிரம் கூடுதலாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்து வருகின்றன.
 
இந்நிலையில் புனேயில் உள்ள தேசிய வைராலஜி கழகம், பிரிட்டனின் உருமாறிய கொரோனா வகை மாதிரி இந்தியாவில் பரவும் கொரோனாவை விட அதிகமாக ஒட்டிப் பரவக்கூடியதல்ல என்று கூறியுள்ளது. அதாவது, பிரிட்டன் வகை கொரோனா இந்திய கொரோனா வைரஸை காட்டிலும் அதிகமாக பரவும் தன்மை கொண்டதல்ல என்பது கண்டறியப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்