+86 வாட்ஸ் ஆப்பில் ஆபத்து: எச்சரிக்கும் இந்திய ராணுவம்...

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (21:07 IST)
அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப்பை கவனத்துடன் பயன்படுத்தவும் என இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குரித்த விரிவான செய்திகள் இதோ...
 
இந்தியாவில் உள்ள வாட்ஸ் ஆப் பயனார்களை சீன ஹேக்கர்கள் குறிவைத்து இலக்காக்குவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய ராணுவ எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் காவல் பணியில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் வாட்ஸ்-அப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த எச்சரிக்கை ராணுவ வீரர்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
சீன மொபைல்கள் இந்திய சந்தையில் அதிகம் புழக்கத்தில் உள்ளது. இதனை பயன்படுத்தும் ராணுவ அதிகாரிகள் சீனாவின் ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 
 
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு... சீனா உங்களுடைய சிஸ்டத்தை ஹேக்கிங் செய்ய இப்போது வாட்ஸ் அப் குரூப்பை பயன்படுத்துகிறது. உங்களுடைய குரூப்களில் +86 சீன எண்களுடன் ஊடுருவும் சீன ஹேக்கர்கள் உங்களுடைய தரவுகளை திருட துவங்குகிறார்கள்.
 
+86 என்ற சீன எண்கள் உங்களுடைய குரூப்களில் ஊடுருவி உள்ளனவா என்பதை நீங்கள் தொடர்ந்து கண்காணித்து வாருங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்