செல்ஃபி மோகத்தால் உயிரிழப்பவர்களில் இந்தியா முதலிடம் ! அதிர்ச்சி தகவல்

வியாழன், 27 ஜூன் 2019 (21:09 IST)
தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்துவிட்டது. அதனால் மக்கள் தாங்கள் நினைத்ததை மிக எளிதில் தொழில்நுட்பத்தின் வழி நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு கைகொடுத்துவருகிறது. ஆனால் மனிதன் தன் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்பத்தை அவனது அழிவுக்காக பயன்படுத்திக்கொள்வதுதான் வேதனையாக உள்ளது.
செல்போன்கள் இன்றைய நவீன உலகின் வரப்பிரசாதம்.   இதன்மூலம் ஒட்டுமொத்த உலகுடனும் நாம் கலந்துறவாட முடியும் . அதில் செல்ஃபி மோகம் வந்தது முதலாகவே மக்கள் பிரபலமானவர்கள், விரும்பியவர்கள் என்று போட்டோ எடுத்து போய், இன்று மலை, விலங்குகள் ,ஆறுகள் , விமானம் , குன்றுகள் ,பள்ளத்தாக்குகள், ஓடும் ரயில்கள் என்று பல இடங்களில் உயிரைத் துச்சமாக நினைத்து சாகசம் என்ற பெயரில் விபரீதங்களை சந்தித்து வாழ்வுக்கு வினையை தேடுக்கொள்கிறார்கள்.
 
இந்நிலையில் குடும்பம்  மருத்துவம், ஆரம்ப சுகாதாரம் தொடர்பாக ஒரு இதழில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியர்கள் மட்டும்தான் அதிகளவு செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2011 முதல் 2017 ஆம் ஆண்டுவரை சுமார் 259 பேர் செல்ஃபியால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கிறது. முக்கியமாக இதில் 159 பேர் இந்தியாவில் மட்டும் செல்ஃபி  மோகத்தால் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்