இனிமேல் இந்தியா முழுவதும் டோல்கேட் இருக்காது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு..!

Siva

வியாழன், 10 ஏப்ரல் 2025 (07:55 IST)
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் நெடுஞ்சாலை பயணங்களை மேலும் வசதியாக மாற்றும் புதிய திட்டங்கள் விரைவில் அமலுக்கு வரும் எனவும் இந்த மாற்றத்திற்கு பின் இந்தியா முழுவதும் டோல்கேட் அகற்றப்படும் என உறுதியளித்துள்ளார்.

பல வருடங்களாக பொதுமக்கள் எதிர்பார்த்த டோல்கேட் கட்டணம் குறைப்பு, விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. FASTag முறைக்கு பதிலாக, இப்போது GNSS (குளோபல் நேவிகேஷன் செயற்கைக்கோள் அமைப்பு) அடிப்படையில் புதிய கட்டண முறை அறிமுகமாக உள்ளது.

இந்த புதிய முறையில், வாகனங்கள் GNSS டிவைஸ்கள் மூலம் கண்காணிக்கப்படும். பயணித்த தொலைவின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் டோல்கேட் அருகே வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, போக்குவரத்து நெரிசலும் குறையும். மேலும், தினசரி 20 கிமீ வரை பயணிக்கும் உள்ளூர் பயணிகளுக்கு கட்டணம் விலக்கு வழங்கப்படும். இந்த திட்டம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் இஸ்ரோ தொழில்நுட்ப ஒத்துழைப்பில் செயல்படுத்தப்படுகிறது.

 GNSS மூலம் கட்டணம் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்ட பின் அனைத்து டோல்கேட்டுகளும் மூடப்பட்டு சேட்டிலைட் மூலமாக கணக்கிடப்பட்டு அதற்கேற்ற கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இந்த கட்டணம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.   மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வாகன உரிமையாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும்  பெரும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்