விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

Mahendran

வெள்ளி, 9 மே 2025 (11:20 IST)
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றம் நாளுக்கு நால் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் பக்கம் இருந்து தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களால், ஜம்முவில் உள்ள எல்லை கிராமங்களில் மக்கள் பாதுகாப்புக்காக பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
 
பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு எதிராக இந்திய ராணுவம் கணக்கிலக்காத பதிலடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. குறிப்பாக, பாகிஸ்தான் பக்கத்தில் இருந்து டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடக்கிற தாக்குதல்களை இந்திய ராணுவம் தடுத்து முறியடித்து வருகிறது.
 
இந்நிலையில், மக்கள் பாதுகாப்பு முக்கியமாக கருதி, ஜம்மு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே சீரமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.
 
போர் பதற்றம் உருவாகும் சாத்தியத்தை உணர்ந்து, அந்த பகுதி மக்களை பாதுகாப்பாக வைக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
இன்று காலை 10 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசிய போது, தாக்குதல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவான தகவல்களை வழங்கினர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்