இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னமும் மீண்டு வராத நிலையில் புதிதாக தோன்றியுள்ள பறவைக்காய்ச்சல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் முதலில் கண்டறியப்பட்ட பறவைக்காய்ச்சல் பின்னர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லியிலும் காகங்கள், வாத்துகள் இறந்து கிடந்த நிலையில் அவற்றை பரிசோதனை செய்ததில் அவற்றிற்கு பறவைக்காய்ச்சல் இருந்தது தெரிய வந்துள்ளது. டெல்லியை தொடர்ந்து உத்தரகாண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக 10 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது.