உலக அளவில் பாதிப்பில் முதலிடம் தொட்ட இந்தியா! – அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது!

வியாழன், 22 ஏப்ரல் 2021 (12:00 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலக அளவில் தினசரி பாதிப்பில் முதலிடத்தை அடைந்துள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களில் வேகமாக அதிகரிக்க தொடங்கிய நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியா முழுவதும் மாநில வாரியாக ஊரடங்கு, தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையிலும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இன்றைய பாதிப்புகள் மூலம் உலகில் அதிகமான கோரோனா தினசரி பாதிப்பு கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. 3,15,925 தினசரி பாதிப்புகளுடன் இந்தியா முதலிடத்திலும், 3,07,581 தினசரி பாதிப்புகளோடு அமெரிக்க இரண்டாவது இடத்திலும் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்