1500, 2000ஐ அடுத்து 3000ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அச்சம்..!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (12:10 IST)
நேற்று முன்தினம் 1500, நேற்று 2000 என இருந்த கொரோனா பாதிப்பு இன்று 3000ஐ தாண்டி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ள தகவல் பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் கடந்து சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் இதனை அடுத்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3016 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13,053 என அதிகரித்துள்ளது. 
 
இந்தியாவில் தினமும் 1000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் அவசர ஆலோசனைக் கூட்டங்கள் நடந்த திட்டமிட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்