இந்தியாவில் 4 லட்சம் பிச்சைக்காரர்கள்! – எந்த மாநிலத்தில் அதிகம்..?

வியாழன், 7 ஏப்ரல் 2022 (10:05 IST)
இந்தியாவில் உள்ள பிச்சைக்காரர்கள் குறித்த கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 4 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மக்கள் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் நாடு முழுவதும் ஆதரவற்ற பிச்சை எடுத்து வாழும் நிலையில் உள்ள மக்களும் இருக்கவே செய்கின்றனர். சமீபத்தில் மத்திய அரசு நாட்டில் உள்ள பிச்சையெடுத்து வாழும் மக்கள் குறித்த கணக்கெடுப்பு குறித்து அறிவித்துள்ளது.

அதன்படி நாடு முழுவதும் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 4,13,670 பிச்சைக்காரர்கள் உள்ளனர். இந்தியாவிலேயே பிச்சைக்காரர்கள் மேற்கு வங்கத்தில் அதிகமாக உள்ளனர். அதிகபட்சமாக 81,244 பிச்சைக்காரர்கள் மேற்கு வங்கத்தில் உள்ள நிலையில் அதில் 4,323 பேர் 10 வயதிற்கு உட்பட்டவர்கள்.

அடுத்ததாக உத்தர பிரதேசத்தில் 65,835 பிச்சைக்காரர்களும், ஆந்திராவில் 30,219 பிச்சைக்காரர்களும் உள்ளனர். தமிழகத்தில் 6,814 பிச்சைக்காரர்கள் உள்ள நிலையில், அதில் 782 பேர் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்