பிபிசி அலுவலகங்களில் 3வது நாளாக சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?

வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:00 IST)
டெல்லி மற்றும் மும்பை பிபிசி அலுவலகங்களில் நேற்று முன்தினம் வருமானவரித்துறையினர் சோதனை தொடங்கிய நிலையில் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் சோதனை தொடர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
டெல்லி மற்றும் மும்பை பிபிசி அலுவலங்களில் வருமானவரித்துறையினர் மூன்று நாட்களாக சோதனை நடத்தி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பிபிசி அலுவலகங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார் வந்ததை அடுத்து வருமானவரித்துறை என சோதனை செய்வதாக கூறப்பட்டாலும் பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தான் இந்த சோதனை செய்யப்படுகிறது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் இந்த சோதனை முடிவடைந்ததும் என்னென்ன முக்கிய ஆவணங்கள் சிக்கியது என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிபிசி அலுவலக சோதனைக்கு பிரஸ் கிளப் ஆப் இந்தியா உள்பட பல அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதை.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்