அசாமில் வாகன பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து...2 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (17:55 IST)
அசாம் மாநிலத்தில் வாகனம் கவிழ்ந்து 2 சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் ஹைலகண்டி என்ற மாவட்டத்தில் உள்ள கட்லிச்சேரா என்ற பகுதியில் இளைஞர்கள் சிலர் தங்கள் வாகனத்தில் சுற்றுலா சென்றனர்.

அப்போது, கரீம்கஞ்ச் மாவட்டம் ரதாபரி பகுதியில் வாகனம் சென்றபோது, வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

அருகில் உள்ள மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்புபடையினரும் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர், இவர்கள் தற்போது அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்