உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதேநேரம், தமிழக அரசு மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மாணவ அமைப்பினர், விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலர் போராட்டம் நடத்தி வரும் வேளையில் பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சாமி தமிழர்களை உதாசினப்படுத்தும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.